Thursday, December 8, 2011

                                                                          நாம் சேர்ந்து


எல்லோருக்கும் தனிமை என்பது    நண்பரை அறிவதற்கு முன்பே.
ஆனால் தோழி .... எனக்கோ    உன்னை பார்த்த பின்பே.

இரும்பாய் இருந்த என் மனமும் இனிப்பாய் மாறியதோ
  காந்தமென என்னருகே கண்ணே நீ வருகையிலே?

நீ என் மனதில் குடியேறிய பின்பு மனம் கனத்து போனது.
   ஆனாலும் ஏன் பறப்பது போன்ற உணர்வு?

நீ என்னை பார்க்கும் போதெல்லாம் என் இதயம் வேகமாய் துடிக்கிறது.
   பார்த்து........ உனக்கு வலிக்கப் போகிறது.

உன் இனிய குரலை தான் மட்டுமே கேட்டு ரசிக்க முடியுமென கர்வப்பட்டன என் செவிகள் ,
   உன் மௌனத்தையும் அறியும் கண்களை பற்றி அறியும் வரை.


உன் உருவை தான் மட்டுமே கண்டு இன்புற முடியுமென இறுமாந்திருந்தன என் கண்கள்,
   உன் நினைவிலேயே இன்புறும் மனதை பற்றி அறியும் வரை.


அன்பே !  உன்னை என் பெண் சாதியாய் தான் நினைத்திருந்தேன்.
     உன் சாதி குறுக்கே வரும் வரை.

கல்லானாலும் நீயே என் கணவன் என்றாய்.  அந்தோ !
   நீயில்லை என்ற பின் தானே மனம் கல்லானது.

நான் நிம்மதியை தேடி போகிறேன்.  எங்கே ,
     நாம் "சேர்ந்து"     தேடுவோமா?This was written during my college days..... :)
Tuesday, March 8, 2011

A tribute all women I respect and admire

                                                       பெண்மையின் பரிமாணம்  

தங்கத் தமிழ் பாடல்களில்
  சங்க கால மங்கையரை
மங்கலமாய் போற்றிப் பல
  பழங்கதைகள் சொன்னதுண்டு.

முறத்தினாலே புலியதனை
   துரத்தி விட்ட பெண்ணவளும்
அறப்போரில் மகனிறப்பை
  அறிந்து மகிழ்ந்த தாயவளும்

களப்போரில் கலமேந்தி
  கயவர்தலை கொய்தவளும்
கணவன்தனை தலையிலேந்தி 
  கணிகையிடம் சென்றவளும்

நமன்தனையே எதிர்கொண்டு
  மணந்தவனை மீட்டவளும்
கொண்டவனையிழந்ததாலே
  கொழுநகரை எரித்தவளும்

கற்புடனே கணவனோடு
  கானகமே சென்றவளும் 
அற்பர்களால் துகிலிழந்து
  அருஞ்சபதம் செய்தவளும்

கட்டியவன் சாபத்தாலே 
  கல்லாகி போனவளும்
பெண்ணினத்தின் பிரதிநிதியே
பெண்மைக்கு இலக்கணமே.

பெண்ணிற்கிங்கே பெருமைகளும்
   பாரதத்தில் பலவுண்டு
நாடும் மொழியும்  பெண் என்றார்
  ஓடும் நதியும் பெண் என்றார்

ஏடு கல்வி கலையதுவும்
  எட்டுவித செல்வங்களும்
நாடு காக்கும் வீரமதும்
  நங்கையினம் எனச்சொன்னார்.

பிஞ்சுமனம் கொஞ்சு மொழி 
  பருவமதில் தகப்பன் என்றும்
அஞ்சுகத்தை அரவணைக்க
  அன்பான கணவன் என்றும்

பஞ்சுசிகை காலமதில்
  பாங்குடனே தனயன் என்றும்
பெண்ணிற்கிங்கே காவலென்று 
  பெரியோர்கள் சொன்னதுண்டு.

எந்தவொரு பருவத்திலும்
  ஏந்திழைக்கு காவலது
அச்ச (ம் ) மட நாணமென்று
  அறிந்தவர்கள் சொல்வதுண்டு.

அச்சம் மடம் நாணமென்று
  அஞ்சி வாழ்ந்த மங்கை நீயும்
துச்சமென அச்சம் வென்று
  இச்சையோடு வாழ்கின்றாய்.

அடிமேல் அடி எடுத்து
  அடிமைத்தளை உடைத்திட்டாய்
"இவனுக்கே" நான் நிகரென
    அவனிக்கே உரைத்திட்டாய்.

நிலாச் சோறு ஊட்டியவள் 
  நிலவை பிடிக்க விழைகின்றாய்
கலை பலவும் கற்றுணர்ந்து 
  தலை சிறந்து வாழ்கின்றாய்.

பெண்ணுனக்கு எதிரியென்று
 பெயரளவில் யாருமில்லை
பெண்டிருக்கு பேரெதிரி 
  பெண்ணை விட வேறுமுண்டோ?

பெண்சிசுவை சிதைக்குமந்தப்
  பேயவளும் பெண்ணினமே
பெண் எடுக்கப் பொன் வாங்கும் 
  தீயவளும் பெண்ணினமே.

கண்ணசைவில் காளையரை
  கவர்ந்திடவும் பெண்களுண்டு
தன்னினத்தை தரம் தாழ்த்தி
 தரம் கெட்டு போனதுண்டு.

பெண் என்றால் பேயிரங்கும்
  பெண்ணாலே  போர் மூளும்
பெண்ணிவளும் நினைத்திட்டால்
  கொற்றவனும் கொடி துறப்பான்

இவையெல்லாம் பெண்ணுனக்கு
   புகழில்லை வையகத்தில்
வஞ்சப் புகழ்ச்சியில் நீ
   வீழ்ந்திடவே செய்யாதே.


தாயுமாகி நின்றாய் நீ
  தாரமு மானாய் நீ
உலர்மணலில் ஈரம் போல் 
 உற்றவனின் தோழியும் நீ

தலைமுறையை உருவாக்கி 
  தனிப்பெருமை கொள்வதுடன்
தலை சிறந்த உவமையாக 
  உனை நீயே மாற்றிடுவாய்.

சிவனில் பாதி சக்தியென
  சீவனை ஆட்கொள்ள 
மூவுலகும் உனக்கிருக்க 
  முப்பதும் (%) உனக்கெதற்கு?


மண்ணினத்தை வாழ்விக்கும் 
   மகத்தான சேவை செய்யும்
மங்கையுனை போற்றுதலே 
  மாந்தர் எம்  நெறியாகும்.


Monday, February 7, 2011

My Trip to Ancient temples in Vellore and Krishnagiri Districts

அன்புள்ள நண்பர்களே,

என்னுடைய திருக்கோயிலூர் பயணத்துக்கு பிறகு நாங்கள் நீண்ட நாட்களாக நினைத்திருந்த வேப்பனப்பள்ளி ராமர் கோயிலுக்கு போக ஒரு நல்ல சந்தர்ப்பம் அமைந்தது.

ராஜு மாமா ஒரு நாள் என்னிடம் திருப்பத்தூர் அருகே உள்ள கொரட்டி என்னும் கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலுக்கு போக வேண்டும் என்றும் அப்படியே வேப்பனப்பள்ளி கோயிலுக்கும் போகலாம் என்றும் கூறினார்.  அதன் படியே நாங்கள் ( ராஜு மாமா, நான், சாந்தி, ரஞ்சனி மாமி ) பெப்ரவரி 2 ம் தேதி பயணப் படுவதாக முடிவு செய்தோம்.

வழக்கம் போல காலை 5.30 க்கு கிளம்ப முடிவு செய்து 6 மணிக்கு கிளம்பினோம்.  வழக்கத்துக்கு மாறாக அன்றைக்கு டிராபிக் நிறைய இருந்ததால் மெதுவாக தான் செல்ல வேண்டியிருந்தது. சென்னை பெங்களூர் சாலையில் வண்டி வழுக்கிக் கொண்டு சென்றது... காலை பனியை சுகமாக அனுபவித்துக் கொண்டு ஒரு ஆனந்தமான பயணம். 220 km  கடந்து காலை மணி 8.45 க்கு திருப்பத்தூர்  வந்தடைந்தோம்.

திருப்பத்தூர் முதல் சாலைகள் படு மோசமாக இருந்தது எங்கள் பயணத்துக்கு சற்றே இடையூறாக இருந்தது.  எங்கள் வேகம் மிகவும் தடைப்பட்டது.  கொரட்டி கிராமத்தில் மலர் மற்றும் மாலைகள் கிடைப்பது அரிது என்று முன்னரே எங்களுக்கு தகவல் இருந்ததால் திருப்பத்தூரிலேயே மாலைகளை  வாங்கிக்கொண்டோம்.

கொரட்டி.

திருப்பத்தூரை சுற்றி மிகவும் பழமையான 10 சிவன் கோவில்கள் 10 கிராமங்களில் அமைந்திருப்பதால் தான் அந்த ஊருக்கு  திரு  "பத்தூர்"  என்று பெயர் வந்ததாக அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.  அப்படி அமைந்த 10 கிராமங்களில் ஒன்று தான் கொரட்டி என்பது.  நாங்கள் கொரட்டி பயணம் மேற்கொண்டதற்கு மிகவும் முக்கியமான காரணம் அங்கு அமைந்திருக்கும் பால சக்தி மனோன்மணி தான்.  பாலா திரிபுர சுந்தரி ஆலயத்துக்கு செல்ல வேண்டும் என்ற எங்கள் எண்ணமும் தேடுதலும் கோரட்டியில் முடிவடைந்தது.  கார்த்தி மூலமாக கோரட்டியில் அமைந்துள்ள பாலாவை பற்றி அறிந்து இந்த பயணம் மேற்கொண்டோம்.

கொரட்டி திருப்பத்தூரில் இருந்து 8 km தொலைவில் திருப்பத்தூர் சேலம் சாலையில் உள்ளது.  இறைவனை அடைய மிகவும் கஷ்டம், பொறுமை, விடா முயற்சி ஆகியவை வேண்டும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் அந்த 8 km சாலை மிகவும் மோசமாக இருந்தது.  20 km  வேகத்துக்கு மேல் எங்களால் போக முடிய வில்லை.  கொரட்டி சென்று அடைய மணி 10  ஆகி விட்டது.

கொரட்டி ஒரு மிகவும் சிறிய கிராமம்.  பிரதான சாலையில் இருந்து பார்த்தாலே உள்ளிருக்கும் கோயில் கோபுரம் தெரிகிறது. கோயிலுக்கு இரண்டு வாயில்கள் இருக்கிறது... பிரதான வாயில் மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது. நாங்கள் உள்ளே சென்று பார்க்கும் போது கோயிலின் உள்ளே சிவனையும் அம்பாளையும் தவிர எங்களை வரவேற்க யாருமே இல்லை.  கார்த்திக்கு தெரிந்த கோயில் குருக்கள் ( வெங்கட்ராமன் ) எங்கிருக்கிறார் என்று தேடி கொண்டு கிழக்கு வாசல் அருகே உள்ள அவரது வீட்டுக்கே சென்று கூட்டி வந்தோம்.

அந்த சிறிய கிராமத்தில் அமைந்துள்ள அந்த சிவன் கோயில் மிகவும் பெரியதாக அமைந்துள்ளது.  வெங்கட்ராமன் குருக்கள் கோயிலைப் பற்றி  மிகவும் மனமுவந்து பல நல்ல தகவல்களை கூறினார்.

                                                          கிழக்கு வாசல்
        

ராஜ கோபுரத்தின் அருகே ராஜு மாமா , ரஞ்சனி மாமி மற்றும் சாந்தி


                                               கொரட்டி காளத்தி நாதர் சன்னதி

இங்கிருக்கும் ஈஸ்வரன் காளத்திநாதர் என்றே அழைக்கப்படுகிறார்.  அம்பாள் ஞான ப்ரசூனாம்பாள்.  ஆமாம்.  இந்த கோயிலையும் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோயிலையும் ஓரே சமயத்தில் தான் அமைத்தார்கள் என்று வெங்கட்ராமன் குருக்கள் கூறினார்.  இங்கிருக்கும் சிவன் மேற்கு நோக்கி அமைந்திருக்கிறார்.   எனவே இங்கிருக்கும் சிவ லிங்கத்துக்கும் ஆவுடையார் இடது பக்கம் தான் இருக்கிறது. ( நாம் முன்பு அரன்கண்டநல்லூரில் பார்த்தது போல ) இங்கிருக்கும்  சிவனுடைய சாந்நித்தியமும், சக்தியும் மிகவும் அதிகமாக அமைந்திருப்பதாக ராஜு மாமா கூறினார்.  நான் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் மாமா சந்நிதானத்துக்கு எதிரே அமர்ந்து தினத்தில் ஈடுபட்டார்.   சிவன் சன்னதியில் வெளியே வடக்கு நோக்கி பாலா சக்தி மனோன்மணி அமைந்திருக்கிறாள்.  இங்கு பாலா சக்தி அமைந்தது ஒரு தனி கதை.

இந்த கொரட்டி கிராமம் சற்றே பிரபலம் அடைந்திருப்பது ஒரு கிருஸ்துவ அன்பரால் தான் என்றால் உங்களுக்கு சற்று ஆச்சர்யமாகவே இருக்கும். திரு  வின்சென்ட் அமல்ராஜ் திருப்பத்தூரில் ஆசிரியராக இருக்கிறார்.  அவர் பல சித்தர்கள் பாடல்களுக்கு பொருள் எழுதி நூல்களை வெளியிட்டு ஒரு சிவ பக்தனாகவே ஆகிவிட்டாராம். ஒரு நாள் அவரது கனவில் அம்பாள் ஒரு சிறு பெண் வடிவில் தோன்றி தான் பாலா சக்தி என்றும் தன்னுடைய பெயர் மனோன்மணி என்றும் கூறி தன்னை வடிவமைத்து கோரட்டியில் உள்ள சிவன் கோயிலில் அமைக்குமாறு கூறினாளாம்.  வின்சென்ட் அவர்கள் தன்னுடைய கனவில் கண்ட உருவத்தை ( குளித்து விட்டு ஈரமான தலையுடன் பச்சை நிற ஆடையுடன் கையில் சிவ லிங்கத்துடன் கூடிய தோற்றம் ) தன்னுடைய முஸ்லிம் அன்பரிடம் விவரித்து அவரை கொண்டு ஒரு படம் வரைந்து வைத்திருக்கிறார்.  பின்னர் அந்த படத்தை பார்த்து பாலா சக்தியின் விக்ரகம் அமைத்துள்ளார்கள்.  விக்ரக பிரதிஷ்டை நடந்து 11 வருடங்கள் முடிந்து விட்டது.  இன்றும் இங்கு செவ்வாய் கிழமைகளில் திரு வின்சென்ட் தலைமையில்  வார வழி பாடு நடை பெறுவதாக வெங்கட்ராமன் கூறினார்.
       திரு வின்சென்ட் அமல்ராஜ் கனவில் தோன்றிய உருவ படத்துடன் பாலா விக்ரகம்.
                                          

                                       கையில் சிவ லிங்கத்துடன் பால சக்தி மனோன்மணி


இங்கிருக்கும் பாலாவிடம் மனமுருகி வேண்டி கொள்ளும் வேண்டுதல்கள் எல்லாம் உடனே நிறைவேறுவதாகவும் வெங்கட்ராமன் கூறினார்.  பாலாவின் எதிரே அமர்ந்து சாந்தி அபிராமி பதிகம் பாடினாள்.

இங்கிருக்கும் அம்பாள் ஞான ப்ரசூனம்பாள் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள்.
                                                          ஞான ப்ரசூனாம்பாள்


இன்னொரு முக்கியமான விசேஷம் என்ன என்றால், இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்.  அருணகிரி நாதர் இங்கிருக்கும் முருகனை பற்றி 2 பாடல்களை இயற்றி உள்ளார்.  ( திருப்புகழில் 903 மற்றும்  904 ஆவது பாடல்கள் )  இங்குள்ள முருகனை பாடிய பின்னரே அவர் திருவண்ணாமலை சென்று முக்தி அடைந்ததாக வரலாறு.

                                            வள்ளி தேவானையுடன் கூடிய ஆறுமுகன்

இங்குள்ள முருகன் விக்ரகம் மிகவும் கலை நயத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.  மொத்த விக்ரகமும் வேல் தோற்றத்தில் பன்னிரு கண்ணும் பவள செவ்வாயுடனும், ஆறிரு திண்புயத்துடன் அபய, வரதத்துடன் மீதமுள்ள  10 கைகளிலும் 10 ஆயுதங்கள் தாங்கி மயில் மேல் அமர்ந்து காட்சி தருகிறார்.  அவருக்கு இரு புறங்களிலும் வள்ளியும் தேவானையும் அழகுற அமைந்திருக்கிறார்கள்   மயில் சிற்பமும் அதன் வாயில் இருக்கும் பாம்பின் உருவமும் மிகவும் தெளிவாக வடிவமைக்க பட்டு இருக்கிறது.
                            வேல் தோற்றத்தில் அமைந்த 12 கைகளோடு கூடிய ஆறுமுகன்

இங்கு ஸ்தல விருக்ஷம் வில்வம்.  வில்வ மரத்தின் அடியே நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.  சப்த கன்னிகைகள், பைரவர் சந்நிதிகள் தனி தனியே அமைந்திருக்கிறது.   திருமூலர் சன்னதி ஒன்றும் திரு வின்சென்ட் அமல்ராஜ் அவர்களால் அமைக்க பட்டதாக கூறப்படுகிறது.
                                                        ஸ்தல விருக்ஷம்   வில்வம்     
          
                                                              சப்த கன்னிகையர்


ராஜ கோபுரத்தின் உள் பக்கம் பல சித்திரங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றன... ஆனால் சரியான முறையில் பராமரிக்காததால் அவை அழியும் தருவாயில் இருக்கின்றன.
                             ராஜ கோபுர கூரையில் உள்ள பழமையான ஓவியங்கள் இந்த கோயில் அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும்,  வருவாய் இல்லாததால் வழக்கம் போல புறக்கணிக்கப்பட்ட கோயில்களில் ஒன்றாகவே இருக்கிறது.   திரு வின்சென்ட் அமல்ராஜ் அவர்களது முயற்சியினாலும் மற்றும் பாலா சக்தி மனோன்மணி வார வழிபாட்டு பக்தர்களாலுமே இந்த கோயில் ஓரளவு பராமனிக்க படுகிறது.  வருமானம் வரும் கோயில்கள் போல  அரசின் கட்டுபாட்டின் கீழ் வந்து கழகங்களின் கண்மணிகள் கைவரிசையை காணாமல் இந்த கோயில் அமைதியாக இந்த கிராமத்தில் இருக்கிறது.

நாங்கள் மேலும் சில கோயில்களை பார்த்து விட்டு அன்று இரவே சென்னை திரும்ப முடிவு செய்த காரணத்தால் நாங்கள் அங்கிருந்து கிளம்ப வேண்டியதாயிற்று.
                                                      வெங்கட்ராம குருக்கள்

திரு வெங்கட்ராமன் 11  தலைமுறைகளாக அவர்கள் குடும்பம் கோயிலில் குருக்களாக இருப்பதாக கூறினார்.  இந்த தொன்மையான கோயிலில் சிவனையும் அம்பாளையும் கட்டி காக்க அவருக்கு அரசு தரும் சம்பளம் ரூ. 60 மட்டுமே.  நாளொன்றுக்கு அல்ல.  மாத சம்பளமே அவ்வளவு தான்.   அவரது இல்லம் கோயிலின் கிழக்கு வாசல் அருகே இருக்கிறது.  சிவனுக்கு வைத்திருந்த காணிக்கையை சிவனடியாருக்கு ( திரு வெங்கட்ராமன் அவர்களுக்கு ) கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
 
ஆண்டவனை நோக்கி செல்லுவது தான் கடினம் ஆனால் அவன் தரிசனம் கிடைத்த பின் எல்லா விஷயங்களும் நமக்கு சுலபமாகி விடுகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் வழியில்  ஒருவர் எங்களுக்கு வேறு ஒரு வழியை காண்பித்து ஆதியூர் என்ற கிராமத்தின் வழியாக செல்லும்,படியும் சாலைகள் நன்றாக இருபதாகவும் கூறினார்.  அந்த செய்தி எங்களை விட என்னுடைய இன்னோவா காருக்கு வயிற்றில் பாலை வார்த்தார் போல இருந்திருக்கும்... ஏனென்றால் திருப்பத்தூரில் இருந்து கொரட்டி வரும் வழி மிகவும் மோசமானதாக இருந்ததால் நிச்சயமாக என்னுடைய காருக்கு வாய் இருந்தால் அழுதிருக்கும்.

ஆதியூர் வழியாக வெகு விரைவில் கிருஷ்ணகிரி சாலையை அடைந்தோம்.  நல்ல சாலை எனவே வண்டியும் நல்ல வேகம் எடுத்து 12 மணிக்குள் வேப்பனப்பள்ளி சென்றடைய எண்ணினோம். கந்திலி, பர்கூர் வழியாக கிருஷ்ணகிரி சென்று ஹோசூர் செல்லும் சாலையில் வேப்பனபள்ளி செல்லும் பாதைக்கு செல்ல வேண்டும்.  கந்திலியை கடந்து செல்லும் சமயம், நாங்கள் கடந்து வந்த காலமும் நினைவுக்கு வந்தது.  விடுமுறை நாட்களில் திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு பேருந்து பயணத்தின் போது கந்திலியில் முறுக்கு வாங்கி சாப்பிட்டது ஞாபகம் வந்தது.  திருப்பத்தூரில் ஏறியவுடன் எப்போது கந்திலி வரும் என்று காத்திருந்த காலம் அது.  கந்திலி முறுக்கு என்பது அந்த காலத்தில் அவ்வளவு பிரசித்தம்.  ஆனால் இப்போது யாரையும் பார்க்க முடியவில்லை. அப்போது முறுக்கு விற்றவர்களின் பையன்களும் பேரன் பேத்திகளும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு TCS, CTS என்று போயிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

பர்கூர் சிறிய ஊராக இருந்தாலும் நன்றாக இருந்தது.  பழைய முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்ட இடம்.  பெயரை காப்பாற்ற வேண்டி பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.  ஒவ்வொரு தேர்தலிலும் இதுபோல சிறு கிராமங்களில்
பெருந்தலைவர்கள் போட்டியிட்டாலே எல்லா கிராமங்களும் முன்னேறி விடும்.

வேப்பனபள்ளி

சரியாக 12.30 க்கு வேப்பன பள்ளி வந்து சேர்ந்தோம்.  அது கொரட்டியை விட சிறிய கிராமம்.  அந்த கிராமத்தின் நடுவே அமைந்தது தான் ராமர் கோயில்.  வேப்பன பள்ளி கிருஷ்ணகிரி கோலார் செல்லும் பாதையில் தமிழ் நாட்டின் எல்லையோர கிராமம்.  தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா மூன்றும் சந்திக்கும் இடத்தில உள்ளது.  இங்குள்ள மக்கள் பெரும்பாலும் தெலுங்கு கலந்த தமிழ் பேசுகிறார்கள்.  எதிர்பார்த்த படியே கோயில் மூடி இருந்தது.  ஆனால் சிறிய கிராமம் என்பதால் குருக்களை வீட்டிலிருந்து அழைத்து வருவது மிகவும் எளிதானது.   நாங்கள் சென்று பத்து நிமிடங்களுக்கெல்லாம் ஒருவர் சென்று குருக்களை அழைத்து வந்தார்.  வீட்டிலிருந்து கூட்டி  வரப்பட்டதால் முகம் சுளிக்காமல் வந்த குருக்கள் உற்சாகத்துடனும் காணப்பட்டார்.  எங்களுக்காகவே அப்போது கோயில் திறக்கப்பட்டு உச்சி கால பூஜை நடத்தப்பட்டது.

 அப்போது எனக்கு நானும் ராஜு மாமாவும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மடிப்பாக்கம் பெருமாள் கோயில் சென்றது ஞாபகம் வந்தது.  மடிப்பாக்கம் கோயிலுக்கு நாங்கள் செல்லும் போது மணி சரியாக 10.30 .  கோயில் மூடும் நேரம் தான்.  நாங்கள் உள்ளே வருவது தெரிந்தும் சிரித்துக்கொண்டே  அந்த கோயிலின் பட்டர் சந்நிதானத்தை மூடினது இன்றும் மறக்க வில்லை. அவர் இரண்டு நிமிடம் காத்திருந்தாலும் நாங்கள் பெருமாளை தரிசித்து இருப்போம்.  ஆனால் எங்களுக்கு அன்று சாமி வரம் குடுக்க காத்திருந்தாலும் பூசாரி தடுத்து விட்டார்.

ஆனால் இந்த கிராமத்தில் எங்களை வரவேற்று எங்களுக்காகவே கோயிலை திறந்து \
பெருமாளுக்கு உச்சி கால பூஜையையும் மிகவும் பொறுமையாக செய்தார் குருக்கள்
பாஸ்கராசார்யுலு.  வெகு நாட்களுக்கு பின்பு அஷ்டோத்தரத்தில் உள்ள பகவானது 108 நாமங்களையும் கேட்க முடிந்தது...

வேப்பனப்பள்ளி ராமர் கோயில் மிகவும் சிறியது தான். இப்போது தான் சிறு சிறு வேலைகள் செய்து கோயிலை சற்றே பெரிதாக்க முயற்சி செய்கிறார்கள்.  இந்த கோயில் மிகவும் சிறிதானாலும் எனக்கு மிகவும் பிடித்த கோயில்களில் ஒன்று.  இங்குள்ள ராமர் ஒரு புறம் சீதையையும் மற்றொரு புறம் தம்பி இலக்ஷ்மணரையும் கொண்டு ஆஞ்சநேயரால் சேவிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார். முதன் முதல் இந்த ராமரை பார்க்கும் போதே எனக்குள் ஒரு ஈடுபாடு வந்து விட்டது.. அது முதல் எப்போது கிருஷ்ணகிரி அல்லது ஹோசூர் செல்லும் போதும் ராமரை தரிசனம் செயாமல் போனது இல்லை. எனக்கு அவர் மேல் உள்ள ஈடு பாட்டை ராமர் அங்கீகரிக்கும் விதமாகவே போன வருடம் ராஜு மாமா மூலமாக எனக்கு வேப்பன பள்ளியில் இருப்பது போலவே ஒரு விக்ரகம் தினசரி பூஜைக்காக கொடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.  வீட்டில் தினசரி ராமர் பூஜை செய்யும் போதெல்லாம் வேப்பன பள்ளி ராமர் கோயிலையும் ராஜு மாமாவையும் நினைக்காமல் இருக்க முடியாது.
                                                        வேப்பனபள்ளி ராமர் கோவில்

நாங்கள் கோயிலில் ராமரோடும் குருக்களோடும் அளவளாவிக்கொண்டு இருக்கும் போது கோயிலின் தர்ம கர்த்தா வந்தார்.  அவர் மூலமாக இந்த கோயில் சுமார் 450 வருடங்களாக அங்கு இருக்கிறது என்றும் அங்குள்ள ராமர் மற்றும் மற்ற விக்ரகங்கள் இரத்தின கிரியில் இருந்து கொண்டு வரப்பட்டவை என்றும் தெரிந்து கொண்டோம்.   ஒரே ஒரு குறை, இந்த முறை ராமர் முகத்தை நன்றாக பார்க்க முடியாதது தான்.  முன் எப்போதும் போல இல்லாமல் இப்போது ராமர் முகத்தில் மிகப்பெரிய நாமத்தை சாற்றியிருக்கிறார்கள்.  ஆனால் ராமர் எங்களை நிச்சயம் பார்த்திருப்பார் என்ற நம்பிக்கையோடு அங்கிருந்து கிளம்பினோம்.


                                       சீதா, ராமர், லக்ஷ்மணர் , மற்றும் ஆஞ்சநேயர்                                                     ராம நாமமா, இல்லை நாம ராமரா?


                                                                கருடாழ்வார்


ராமர் கோயில் துளசி தீர்த்தம் எங்கள் பசியை மேலும் கிளப்பி விட்டது.  மதிய உணவை கிருஷ்ணகிரியில் முடிக்கும் முன்பாக கிருஷ்ணகிரியில் எங்கள் பாட்டி  இருந்த வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாளம்மன் ( கிராம தேவதை ) கோயிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தோம்.
                                                       அருள்மிகு பட்டாளம்மன் நாங்கள் சென்ற பாதை எல்லாம் புற வழியாகவே ( bye-pass)  இருந்ததால் தரமான ஹோட்டல் கிடைக்க வில்லை.  எனவே கிருஷ்ணகிரி ஊருக்கு உள்ளே சென்று ஆரிய பவன் ஹோட்டலில் மதிய உணவு கொண்டோம். 35 ரூபாய்க்கு தயிருடன் கூடிய அருமையான சாப்பாடு.  சாப்பிட்டு வெளியே வரும்போது மணி 2.45.

விரிஞ்சிபுரம்


அங்கிருந்து சென்னை சாலையில் பயணப்பட்டு 4.30 க்கு விரிஞ்சிபுரம் வந்து சேர்ந்தோம்.
விரிஞ்சிபுரம் என்னுடைய சொந்த ஊர்.  சொந்த ஊர் என்றால் நிலம் புலம் வீடு இருக்கிறது  அல்லது இருந்தது என்று அர்த்தம் இல்லை.  என்னுடைய பெயரில் (இனிஷியல் ) விரிஞ்சிபுரம் இருக்கிறது. அவ்வளவுதான்.

விரிஞ்சிபுரம் கோயிலும் மிகவும் பழமையானது 1000  வருடங்களுக்கும் முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டது.  பிரம்மாவின் சாபம் நீங்கப்பெற்ற ஸ்தலம் இது என்று ஸ்தல புராணம் கூறுகிறது. பிரம்மாவுக்கு விரிஞ்சி என்று ஒரு பெயர் உண்டு.  எனவே தான் இந்த இடம் விரிஞ்சிபுரம் என்று அழைக்கப்படுகிறது.  இங்குள்ள சிவனுக்கு மார்கபந்து (
வழித்துணை நாதர் ) என்று பெயர்.  அம்பாள் மரகதாம்பாள்.

                                                      மார்கபந்தீஸ்வரர் ஆலயம்


திரு அண்ணாமலையில் அடிமுடி காணமுடியாமல் தோல்வியுற்றார்.  சிவனின் முடியில் இருந்து விழுந்த ஒரு தாழம்பூவை சாட்சியாக கொண்டு முடியை கண்டதாக பொய் கூற சிவன் அவரை தேவ ரூபத்தில் காட்சி அளிக்கக் கூடாது என்றும் விரிஞ்சிபுரம் மார்கபந்து கோயிலில் உள்ள குருக்களுக்கு மகனாக தேவ சர்மன் என்ற பெயருடன் பிறக்குமாறும் சாபமிட்டார்.   அவனது சிறுவயதிலேயே அவன் தந்தை காலமாகி விட உபநயனம் கூட செய்யப்படாத சிறுவனுக்கு பூஜை செய்ய உரிமை இல்லை என்று உறவினர்கள் கூறி அவனது உரிமையை பறிக்க எண்ணினார்கள். அப்போது சிவ பெருமான் ஒரு வயோதிகர் ரூபத்தில் தோன்றி சிறுவனுக்கு பிரம்ம தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்து உபநயனம்,  பிரம்மோபதேசம், சிவ தீட்சை எல்லாம் செய்வித்து அவ்விடத்திலேயே மகாலிங்கமாக மறைந்தார்.  அன்று பூஜை செய்ய உள்ளே சென்ற சிறுவன் மகாலிங்கத்துக்கு தீர்த்தாபிஷேகம் செய்ய எண்ணினார்.  அப்போது மகாலிங்கம் உயரமாக இருந்ததால் சிறுவனாகிய பிரம்மா " ஐயனே உமது முடி எனக்கு எட்ட வில்லை " என்று கூறினார். அன்று திரு அண்ணாமலையில் முடியை கண்டதாக பொய் கூறி சாபம் பெற்ற பிரம்மா இன்று முடி எட்ட வில்லை என்று ஒப்புக்கொண்டதால் சாப விமோசனம் அடைந்தார்.   சிவ பெருமானும் சிறுவனுக்கு எட்டும் வகையில் தனது தலையை சற்றே சாய்த்து அவருக்கு அருள் பாலித்தார்.  இன்றும் தலையை சற்றே சாய்த்த வண்ணமே இங்குள்ள மார்கபந்தீஸ்வரர் இருக்கிறார். இது தான் ஸ்தல வரலாறு.

                                                              சிம்ம தீர்த்தம்

கோயிலுக்கு இரண்டு  மாதங்களுக்கு முன்பு தான் கும்பாபிஷேகம் நடை பெற்றது.  இப்போது மதில்களும், பிராகாரங்களும் நன்றாக செப்பனிடப்பட்டு, சிற்ப வேலைப்பாடு மிக்க தூண்களோடு அழகாக காட்சி அளிக்கிறது.

இக்கோயிலின் சிறப்புகள் பின் வருமாறு.

1) சுமார் 1300 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோயில்.
2) புராண வாக்குகளின் படி கௌரி, விஷ்ணு, பிரம்மா ஆகிய தெய்வங்களாலேயே பூஜிக்கப்பட்ட திருத்தலம்.
3) அப்பர், சம்பந்தர், திருமூலர், அருணகிரி நாதர், அப்பைய தீட்சிதர், பட்டினத்தார் ஆகியோரால் பாடப்பெற்ற ஸ்தலம்.
                                              வழித்துணை நாதர் மேல் திருமூலர் பாடல்

                                                           திருப்புகழில் விரிஞ்சிபுரம்

4) அருணாச்சல புராணம், சிவ ரகசியம், பிரம்மாண்ட புராணம் ஆகிய புராணங்களில் விவரிக்கப்பட்ட பெருமை உடைய ஸ்தலம்.
5) ஆதி சங்கரரால் பீஜாக்ஷர பிரதிஷ்டை செய்யப்பட்ட சிம்ம தீர்த்தம்
                                                     பிரமன் குளித்த சிம்ம தீர்த்தம்
.
6) திருவாரூர் தேர் அழகு, திரு விரிஞ்சி மதில் அழகு என்று பெயர் பெற்றது.
                                                        விரிஞ்சி மதில் அழகு


7) கஜப்ருஷ்டம் வடிவில் அமைந்த கருவறை.  108. 1008 சிவலிங்கங்கள் ( சகஸ்ர லிங்கம் )
8) அழகிய சிற்பங்கள் அடங்கிய தூண்களை கொண்ட மண்டபங்கள்.
நாங்கள் கோயில் சாயரட்சை பூஜைக்காக திறக்கும் சமயத்திலேயே சென்றதால் கூட்டமும் குறைவாக இருந்தது, குருக்களும் ஒருவர் தான் இருந்தார்.  எனவே மற்ற சன்னதிகளில் தரிசனம் மட்டுமே செய்ய முடிந்தது.

கோயிலின் வெளி பிரகாரத்தில் மட்டுமே புகை படம் எடுக்க அனுமதிக்கிறார்கள்.  மிகவும் அமைதியாகவும், மன நிறைவாகவும் அமைந்தது எங்கள் தரிசனம்,
                                                கோயில் ராஜ கோபுரம் வெளியே

                                                      குருவுடன் கோயில் வெளியே


மாலை 6.30 க்கு எங்கள் தரிசனம் முடிந்து விரிஞ்சிபுரத்தில் இருந்து கிளம்பினோம்.  வரும் வழியில் ரத்தினகிரி கோயிலுக்கு செல்ல நினைத்து , நேரமின்மை காரணமாக நேராக சென்னை நோக்கி புறப்பட்டோம்.

பூந்தமல்லி, போரூர் போக்குவரத்து அதிகமாக இருந்தும், இரவு 8.30 க்கு எல்லாம் வீடு வந்து சேர்ந்தோம்.  மிகவும், பழமையான, அமைதியான கோயில்களில், மன நிறைவான தரிசனத்தின் காரணமாக 590 km பயணம் சென்றது ஒரு பொருட்டாகவோ களைப்பாகவோ தெரியவில்லை.

எங்களது அடுத்த கோயில் பயணம் எங்கு எப்போது என்பது அந்த பரமசிவனுக்கும், ராஜு மாமாவுக்குமே வெளிச்சம்.  -----------காத்திருக்கிறேன்......இப்படிக்கு கோபால்

for those who are interested... contact numbers for

Venkatraama gurukkal - Koratti ---09486639564

Basakaacharyulu - Veppana palli ---  09786940678Thursday, January 20, 2011

My Trip to Ancient temples in Thirukoyilur District

On Kaanum Pongal day I went on a day's trip to Thirukoyilur District and it was worth a visit.  Some of the temples I visited were very ancient dated back to 2nd and 3rd century.  Every temple has got its own story both mythical and historical.  I would like to share some of my experiences  and the information about those temples with you... and again let me tell you it is worth visiting these places.


"  It was Raju Mama who was telling me for some days that we should visit Thiruvennnai Nallur Sivan temple and Gnananandar Thapovanam, also a common friend Mr. Rao suggested that I should visit the Brindavanam of Ragoothamar in Thirukoyilur.  In the mean while, Sowmya told me she made a trip to Thapovanam with her parents on New year day and she talked at length about her experience in Thapovanam.  All these made me to make a trip myself.

We ( Raju Mama and his wife, I and Shanthi, and my sister Chinni ) started on 17th Morning around 5.30... We decided to head for Thiruvennainallur first.....  We reached Arasur ( 8 kms after 3rd Toll gate on NH45 ) and  took a right turn to Thiruvennainallur which is 14 kms from Villupuram...We reached Thiruvennainallur at around 8.30am.  It is a very small town and the roads and houses built around the temple ( Sri Krupapureeswarar Temple ).  The temple "gurukkal" and few locals gave us the details and history of the temple, which you may find below.


.....Sri Krupapureeswarar Temple – Thiruvennainallur

The Presiding deity is Lord Shiva ( Krupapureeswarar ) and Ambal is Mangalaambigai.  The Sthala Vruksham is Bamboo ( Moongil ) The gurukal told us it is a SUYAMBU LINGAM. The Rishis of Tharukavana became very proud of their strength of penance and performed a yaga to kill Lord Shiva himself but could not, as they were absorbed by the Lord.  Realizing their guilt, they shed their pride and performed penance on Lord Shiva asking his pardon.  As the Lord granted pardon ( Arul ), this place is also called Arulthurai.  As he granted them Krupa ( pardon ) the Lord came to be knows as Krupapureeswarar. The Lord was in the form of fire during their penance period and existed as Swayambu.

 The Ganesha also is Suyambu here called Pollapillaiyaar....At the age of 5, sage Meykandathevar was initiated by this Vinayaka only.  It is also told that dumb children will regain speech if they offer prayers to this Pollapillaiyar.


No Shiva devotee can afford to miss a visit and worship of Krupapureeswarar in this temple. The temple is very calm and quite and one can feel the vibration inside the temple.

Thiruvennai nallur is closely related with the history of Sundaramoorthy Nayanar.  Sundarar was in his wedding attaire to marry the daughter of Sadangavi Sivachariya.  Lord Shiva of the temple intervened in the guise of an old man and claimed Sundarar as his slave and produced documentary evidence signed by his father to substantiate his claim. Sundarar stoutly refused the claim and called the old man a Lunatic.  Unmindful of this the old man dragged Sundarar to the temple and simply disappeared.  Realizing that the old man was none other than the Lord himself, Sundarar shed tears.  The Lord asked him to sing on him and also suggested that he could use the word "Piththa" ( lunatic ) for a start which he used while refuting his claim.  That was the first famous hymn of Sundarar on Lord biginning with the line " Pitha Pirai Soodi " reverently chanted by the devotees.  After entering the temple on the right side, north ,a mantapam could be seen, where the Lord and Sundarar argued and the panchayat took place.  Also the sandals which the Lord wore while coming to claim Sundarar is also still kept in the temple...  inside the Moolasthaanam.

The goddess Mangalaambigai appears with four hands in the standing posture and instead of Nandi, a Lion is  installed before the Ambal as this is the place where she shed her anger after killing the Demon Mahishasura and having a dip in the river.  The goddess appears with sanganidhi, padhumanidhi and Srichakra.  Also the Gurukkal told us that to reduce Ambal's anger, a fort was built with Vennai ( butter ) around the temple and hence the place is called "Thiruvennainallur".


This is the place where Lord Muruga gave Darshan on his peacock to Saint Arunagiri Nathar.  Also it is told that Arjunan, Indran and Mahavishnu worshipped Shiva here only.

It is also told that great philanthropist Sadayappa Vallal also lived here who encouraged Poet Kambar to write the immortal epic Ramayana.

"


Krupapureeswar & Mangalaambigai
Sri Krupapureeswarar Temple – Thiruvennainallur
.Sandals worn by Lord when he argued with Sundarar ( kept in the temple)
Sri Krupapureeswarar Temple – Thiruvennainallur


The temple was not crowded ...in fact only around 10 people were inside... and they were very helpful and eager to explain the details... As we wanted to visit many temples in the same belt, we were asking for details and also looking for some local guide who can help us... as a god-send,,,an old man of around 65 years offered to help us by coming with us the whole day.  He was very helpful and polite and was knowing all the roads including the small lanes and interior / artillery roads... OK... now we will move on the Thirukoyilur and visit further temples........


The road  to Thirukoyilur from Thiruvennainallur was not good and we had to dirve slowly only.  We reached  Ulagalandha perumaal temple around 11am.  This temple is one among the 108 Divya Desams of Mahavishnu. It is mentioned that this temple was built originally by brick and mortar by Paranthaka Chola (I) in 10th century...and it was patronized by Raja Raja Chola and his son Rajendra Chola, who rebuilt it in Granite in 11th Century.df042.jpg (53228 bytes)As the name indicates, the prime diety, is a Viswaroopa of Vamana avathar, Thiruvikramaswamy  with his one leg resting on Mahabali .  You can see Brahma doing puja to his other leg which is measuring the heavens.  This diety has been sung by 4 azhwars ( Poigai Azhwar, Peyazhwar, Boothathazhwar and Thirumangai Azhwar ).  It is also told that this is the first Divya Desam and first verses of Naalaayira Divya Prabhantham originated from here. Legend has it that the three Alwars (Poigaialwar, Bhutattalwar and Peyalwar) took shelter in the hermitage of Mrikandu munivar, in cramped quarters on a stormy night  when  they  felt the overwhelming presence of a fourth person, who was none other than Perumaal, upon whom they composed a hundred verses in praise. This is where the first verses of the Alwars came into being.


The Thayaar here is called Pushvalli Thaayar ( Poonkoval Nachiyaar ).  There is one sannidhi for Vishnu Durgai just within the main sannidhi of perumaal... and they told us This Durgai is safeguarding the temple as well as the town. There are shrines to Lakshminarayanar, Lakshminarasimhar, Andal, Udayavar, Senai Mudaliyar, Manavala Mamuni, Chakrattalwar,  Varadarajar and Venugopalar here. There is also a Ramar temple behind the Taayar shrine


We could finish seeing this temple within 30- mins though it will take more than 2 hours to see each and every detail of this big temple. Since we wanted to cover as many temples as possible we were ready for our next destination.   Being a perumal temple I thought some prasadam will be on the offer as  we did not eat from the morning, I was very eager to have some thing.  But Perumaal has decided otherwise.


Then across the river we wanted to first go to Ragoothamar Brindavanam,,, but last minute decided to go over to Thapovanam first which is on the same road running along the river.  We realized it was a wise decision  as within 20 mins of our entry in to Thapovanam they closed the main doors ..I think it was Gnananandar himself who guided us. 


gna.jpg (22182 bytes)Thapovanam is a very quite and calm place, where the samaadhi of Guru Gnananandar is there.  A beautiful shrine is built along with a prayer hall. There are small separate sannidhis for various other deities like Shiva, Ganapathy, Venugopalaswamy etc..all tastefully decorated. for those who want to stay there , they have plenty of rooms with all facilities in the opposite side of the road.It is provided free of cost and food is also available for free at a particular time.  As I said earlier, we reached the place on time and it seemed to us like Gnananandar has invited us to join the after noon Arathi... We could see devotees singing arathi songs and here we got tasty curd rice and panchamirudham as prasadam.  As we were all hungry from the morning, it was like amrutham for us.  We spent some time in the Thapovanam and we had to leave as they were closing the shirine for afternoon.  I was told they will reopen by 4 pm only.   The 10 commandments of Guru was on the display which I thought of sharing with you here.


Ten Commandments of : SATGURU GNANANANDAR

Be active;but Not impatient
Be patient;but Not indolent
Be economic;but Not stingy
Be loving ;but Not slavish
Be merciful ;but Wakeful; do not be deceived
Give liberally;but Do not become a pauper
Be a hero;but Not a (Nero) villain
Seek the good ;but Do not hate others
Live in the family;but Be not infatuated with lust
Be unattached ;but Do not run to the forest 

Energized with curd rice, we moved on further to Ragoothamar Virndhavana.


The story behind this Virndhavana as told by the devotees......Ragoothama theerthar  is ranked as one of the greatest celebrities of Sri Madhwa Siddhanta because of his five " Bhava Bodhas " which are the commentaries on the works of Sri Acharya. His guru Sri Raghuvarya Theertha of Uttaradhi Mutt consented to receive the ' bhiksha ' from a couple without children on the condition that the first born should be handed over to the Mutt on birth. He also sent them a gold plate just before delivery so that the new born might be delivered in it. After the delivery the child was taken to the Mutt where he was cleansed with abhisheka water of Sri Moola Rama. At the age of seven the boy was ordained into the holy order and given the name Raghothama Theertha.
After the death of his guru, Swamyji had a dream one day in which Sri Moola Rama in the guise of Sri Raghuvarya Theertha inscribed the ' beejakshara ' on his tongue and instructed him to start teaching his disciples straightaway. Instantaneously all Vedic texts and Philosophical truths flowed in torrents from the mouth of the young Raghothama Theertha; and then onwards he became the Acharya.
He wrote five commentaries and each is called "Bhava Bodha".
They are :

1) Geetha Bhashya
2) Nyaya Vivarana
3) Vishnu Thathwa Nirnaya
4) Brihadaaranyaka
5) Thathvaprakaashika

He spent his entire life in meditation, penance, puja and preaching the doctrines of Sri Madhwacharya. He was a great devotee of God. People believe that  He still  lives in the brindavana at Thirukoilur and answers the prayers of his devotees who have full faith in him. His aradhana falls on Vaikunta Ekadhasi on which day he shed his mortal coil.According to the statement of elderly scholars, the structure of the Virndhavana was then as follows.
East and west side of the Virndhavana- the image of Shri Guru Raja.
South side of the vrindhavana the image of the mother of Sri Guru Raja and the deserted north side.
The VIRNDHAVANA is covered by a tamarind tree on the north, an amla tree on the east Dakshina pinakini river in the south and an Aswatha (holy fig tree ) on the West.
Then the gate of the VIRNDHAVANA is facing towards west and the image of Shri GURU RAJA was facing towards Sri MUKYA PRANA. It is rare to see even now that the idol of Sri MUKYA PRANA and the facial picture of the mother of Sri GURURAJA are in the same direction facing towards Shri. Thiruvikrama Swamy temple situated in Tirukoilur Town.
One day when the mother of Sri Gururaja was watching the Poojas performed by his son, she suddenly noticed in astonishment that the respective presiding Deities of the idols for which Pooja was performed, come in person and accept the prasadham offered by Shri. GURURAJA. The holy mother realised the spiritual power of her son and pleaded to him that it is her wish that she be given a place in his VRINDHAVANA. so that she can bless whoever comes to VIRNDHAVANA to have a Dharshan of her son. Sri. GURURAJA who had a great respect for his mother, conceded the request of his mother and ordered to carve an image of his mother on the southem side of his VIRINDHAVANA.
According to saastras, a Sanyasi (SAINT) should not make saluation to his erstwhile father but can do so to his erstwhile mother, Bearing this in mind, Sri Gururaja ordered to carve an image of his mother 7 feet above the basement of VRINDHAVANA, so, that the fine drops of holy water poured at the time of abisheka to Vridhavana rinse the image of his mother and other idols to be put up at the time of ABISHEKA and be showered on him ever. It can be witnessed even today.
Even today we can see the same Dakshina Pinakini river, the tamarind : amla and holy fig trees on the same direction. But the only change is the amla and fig trees have been planted afresh in their original places. Senior citizens say that the branches of the tamarind tree are burnt as and when they begin to cover the VRINDHAVANA. The wet shyati (Saffron coloured cloth) put to cover the VRINDHAVANA is being removed as soon as the pooja is over, otherwise the cloth catches fire. The reason for this is a c cording to elders, that Sri. GURURAJA desired and told to his successor that no cloth should cover his Vrindhavana and no decoration should be made as he has to be in the Vrindhavana bearing the heat, the cold and the rain and undergo penance.
The bow of the LORD SIVA is known as "PINAKA". The river DHakshina pinakini was said to have been created by Lord Siva by his pinaka bow on the south side and hence the name "DHAKSHINA PINAKINI" exists.
There is a big hole in the tamarind tree situated here. Sick children having mental diseases are put downwards in this hole three times and it is evident that they are cured by the blessing of "SRI RAGHOOTHMA THEERTHA"

The day we went,, there were 1000s of devotees thronging the Vrindhavan and we were told later that the previous night there was an aradhana performed and more than 20000 devotees were there...


As described above, I could see the tamarind tree next to the Vrindhavan  and I could see that the tamarind tree is burnt on the portions where it is trying to cover the Vrindhavan....


We made three pradakshanams and offered prayer at the Vrindhavan....


Here we missed Mr. Rao, ( he only suggested us to visit Vrindhavan for long time ) who was also there in the same premises,, which we came to know only the next day... Had we met Mr. Rao in Vrindhavan, we would have been offered with a big feast... However, I got the Panchamirtham the next day from Mr. Rao... Mr. Rao told me he offered special prayers for me and assured me that some thing good will happen very soon... :)

It was around 12.30pm and we wanted to see Parikkal Lakshmi Narasimhar also before 1 pm and decided to skip food and proceeded directly.


However on the way out we were told that there two famous Shiva temples, both very old with history behind them.  We first proceeded to "Athulyanathar temple" in Arankanda Nallur, which is acutally built on a rock.


The temple is located at about 3 km from Thirukkovilur towards Villupuram. The temple is situated in a beautiful location on a hillock adjacent to the South Pennai river and is visible from a distance across the river. There are two entrances, one through the main road and the other through the river which is very scenic.  We were told that building of this temple was started around 2nd Century and was continued to be built for 285 years by various kings of Chola and Pandya kingdoms.
Significance:

* One of the 275 Shiva temples glorified by the Thevara hymns

Legends:

* Ramanar has meditated in this temple when he was a young boy. It is said that he was directed to go to tiruvannamalai by the Lord himself here.
* It is believed that the Pandavas visited Arankandanallur and that the temple tank close to the cave in which they stayed was created with Bhima’s mace. There are two sunais (water streams) on the hillock which are said to have been used by Pandavas and Draupadi.

* There is an imprint of Thirugnana Sambandar’s feet here. Sambandar is said to have miraculously moved a huge rock that had been placed to block the shrine. Thirugnana Sambandhar worshipped Thiruvannamalai from this hillock top.
* Worshipped by Prasanda rishi

The Temple: The 160 feet high Gopuram in this shrine (dating back to the 7th century) with three prakarams Rich in inscriptions, it received Royal patronage from local chieftains, the later Cholas and the later Pandyas. This is the south most rock-cut cave temple of Pallavas, with the solitary exception of Tiruchirapalli. Thiruvannamalai is visible from this hill. There is an idol of Ramanar as a young boy in a meditative posture and the temple is visited by many Ramana Maharsishi followers.The Presiding deity is Athulyanathar ( ஒப்பில்லா ஈஸ்வரன் ) and Ambal is "Soundarya kanakambigai ( அழகு பொன்னம்மை ).  As the name indicates, Ambal is so beautiful here and was decorated very well on that day.


Our next stop was Veerattanaeswarar temple.  This temple is situated in Thirukoyilur town closer to the bus stand... This temple also was dated back to 5 th Century... We were told that Lord Shiva here has taken Bhairava avathar ( பைரவர் தோன்றிய இடம் ) to kill Andhagaasuran.  The story is written on the board kept in the temple.  The Ambal here is called "Sivanandha valli"  who is also so beautiful as Soundarya kanakambigai.  Also the Gurukal showed us the Durgai here with eyes look like real with black and white colour.


I was so happy that I got the Bhairava Moola Manthra upadesam from my Guru Raju Mama in Ambaal sannidhi... Actually I was very eagerly looking for this manthra for long, and I was very glad to get it in the Bhairava Sthal itself.


Also in this temple only Avvaiyaar sang her song "Vinayagar Agaval" on Pillaiyar who took her to Kailash ahead of others.


Since it was Kaanum Pongal Day, we were told that all the big temples will be kept open through out the day.  So we took a chance to finish visiting Parikkal also before lunch.


Some of our friends told us that it is good to see 3 Narasimhars on the same day.  Parikkal is .  called South Ahobilam ( தென் அஹோபிலம் ) .  We were told that Narashimha avtar took place in Ahobilam in Andhra Pradesh... After this, as per the request of the saints and rishis, who wanted to see the Narasimha, he appeared in 8 places with Goddess Lakshmi in Tamilnadu... Parikal is one among them.  The other 7 places are Andhili in Vilupuram, Poovarasan Kuppam near Panruti, Singaperumal Koil, Singirigudi, Sindhalawadi, Namakkal and Sholingur.


Out of these 8 temples, Parikal, Poovarasan kuppam, and Andhili are close to each other and we thought we will cover all three on same day.  However, by the time we reached Parikal it was beyond 2pm, and the temple was closed and Perumal was taking rest after Lunch.  So we dicided to move on to Poovarasan Kuppam instead of waiting for the temple to reopen at 4 pm.  We had to cross the NH45 (GST Road ) and via Vilupuram we reached Panruti ( 35 kms from Parikal ).  There we were discussing how to cover three Narasimha temples... Also we were told that Andhili temple was under Balalayam ( only the Urchava Murthy is on display as the temple was getting ready for Kumbabishekam ),, we decided to skip that place.  We were so hungry and decided to have lunch at Panruti. We had not so good Dosa and Curd rice at Hotel NARASIMHA VILAS..  I was jokingly telling every one that we should count this Narasimhar also to make it 3 in a row on same day.  After lunch we proceeded to Poovarasan Kuppam temple through village roads.. Poovarasan Kuppam is around 15 Kms from Panruti and the road was bad again.  However we could reach before the 4 pm, the schedule time for the temple to reopen after Lunch.  Lakshmi Narasimhaswamy Temple in Poovarasankuppam is about 1200 years old. After Hiranya vadha Lord Narasimha whose rage didn’t subside was roaming all over the earth. On the Northern shore of the river South Pennai in South India also known as Dakhshin Pinnakini, the "Saptha Rishi' or Seven rishis prayed to the Lord to have his darshan. The spot were the Lord gave the darshan is called Poovarasankuppam. However, the intensity of the Lord was so much that the rishis couldn’t bear it. They prayed him to cool down and requested his darshan along with his consort Amirthavalli thayar who gracefully obliged. Here the Lord appeared with the Thayar on his lap.


While she partially faces the lord as if in a conversation with him, forwarding the bakthas prayers, she also bestows her blessings with her glance at the bhaktas who visit her temple. This act of the Goddess Lakshmi brought a soothing and tranquil effect on the Lord. To this day, it is only at this temple in the whole world does the Lord Lakshmi Narasimhar appear in such a pose.

Every thing was good in the temple except that many devotees and the temple workers ( except the Gurukkal ) seemed to have consumed liquor and the smell was so overwhelming that one had to close their nostrils.  We were upset with this, as even the temple employees were like this... Since the temple is governed by the State Government, some times, even the temples are like government offices only... We cursed the people and the system and proceeded to Parikal from there which is around 45 kms from Poovarasan Kuppam.

On the way back we dropped our guide ( Mr. Ramalingam ) at Arasur.  He was chatting with us while on the tour and we understood that he is a big land lord having more than 25 Acres of land.  But he looked very simple and polite.  We thanked him for his help without which we could not have covered all the temples before evening..  We reached Parikal from Arasur within 15 mins.


Parikkal Narasimha Temple is an ancient temple located at Parikkalvillage, 23 km from Viluppuram. The place is situated between two rivers, Thenpennai and Garuda. The Lord is also found with His left hand around the Goddess. 

Sthala Puranam: According to a legend, 
Lord Vishnu destroyed a demon known as Parakalasuran here to save his devotees and hence the place came to be known as Parikkal

About the Temple:
Unlike in most of the Narasimha temples, the Utsavar idol here is also that of Narasimha in standing posture with Sridevi and Bhoodevi on either side. There is also a small idol of Lakshminarasimha in the sanctum sanctorum besides that of Sudarsana.
There is a separate shrine for the Goddess, Kanagavalli Thayar, on the right side of the temple, and Her Utsava idol is inside the main sanctum sanctorum. To the northwest is the shrine of Anjaneya, where two idols of Bhakta Anjaneya and Veera Anjaneya are worshipped. A pilgrim can offer obeisance to Anjaneya at the entrance while the idols of Vinayaka and the Nagars are found in the main Prakaram. After praying at the shrine of Garuda, he can worship the presiding deity, Lakshmi Narasimha with His Consort, seated on His left lap. Said to be a Swayambu Murthi, the idol, according to some scholars, was installed by Vyasaraja.


The Anjaneya idol, found inside the sanctum sanctorum, was also installed by him and it is one of the 732 idols installed by the saint all over the south.

The shrine is thronged by those who are afflicted by Navagraha Dosha and they light ghee and oil lamps. They spread before the idols the nine kinds of grains (Navadanyam) and write their pleas on them seeking relief and His blessings. In the northern Prakaram there is a shrine for Lord Varadaraja of Kancheepuram.

There is an ancient "Deepasthampam" in front of the temple, which faces east. .We came out of Parikal temple around 6.30pm and started immediately for Chennai.  We rang up our respective houses to inform about our successful tour.  There were not many good hotels on the way back on the NH45 Bye-pass except one near Dindivanam Hotel Aryas..  However, it was so crowded that we had to come back without food, as the waiting time seemed to be too long.  We continued our drive on NH45 and decided to have dinner at Tambaram around 9 pm.. However, after Chinglepet, the traffic suddenly got into slow motion and we were driving bumper to bumper and inching towards chennai..  It took us more than 2 hours from Chinglepet to Tambaram.  We were so tired and hungry by that time and jumped into a nearest available hotel in Tambaram and ate whatever was available at that time.  We reached home safely around midnight.  We were told that our local AMMA was going with her Radha Gaja Thuraka Padhadhigal on that road to Thiruporur and made our life difficult.


Some Tips from my side


Dont refer to the maps given in the internet.. They are misguiding.  If you are going from Chennai, take NH45 and after the 3rd Toll Gate, drive for another 8 kms to reach Arasur.  From there take a right turn to reach Thiruvennai nallur first..  After that take a direct route to Thirukoyilur via Periya Savalai.  You have to come back all the way to hit NH45 again and drive further 15 kms and take a right turn for Parikal.  It is easy to identify this road as there is a big Hanuman Idol on the left side on the NH45 itself.    


Our exprience tells us that if you have to cover as many temples as possible on the same day, ( We traveled around 540 kms) then, better pack your food and water, to save time and also hotels are not good.


Barring two things ( Drunken employees and devotees in Poovarasan Kuppam and heavy traffic due to a political meeting ) our trip was excellent and we really enjoyed it.


Write to me if you need any more details.


Regards


vsgkrishnan@gmail.com