Thursday, December 30, 2021

                                      வேகத்தில் வருவாயே!         05-12-97  

( written after SHE went to her mom's place for second delivery )


காணவில்லையே என்னை கடந்தசில நாட்களாய் !

கவனமுடனே நீதான் கவர்ந்தே சென்றாயோ?


நானிருக்கவில்லை நானாகவென்றும்

நீ பிரிந்து என்னை நீங்கியே சென்றவுடன்!


கல்லாக மனம் மாறி கண்ணே நீ சென்றவுடன்

மரமாக நான் மாறி துடுப்பிழந்து அலைகின்றேன்!


அலைகடல் போல் மனமே தான் ஆடித்தான் தீர்த்தாலும்

கற்கண்டாம் உன்நினைவே கலங்கரை விளக்காகும்!


உன்னையே எனக்களித்து தாரமாயானாய் நீ

ஆனாலும் எனைப்பேணி தாயுமாகி நின்றாய் நீ!


உலர்மணலில் ஈரம் போல் உற்றதோழியானாய் நீ

காலமெல்லாம் எனக்கெனவே காதலியாய் இருப்பவளே!


கடன்தீர்க்க நான் முயலும் கடுமுயற்சி பலித்திடவே

கண்ணே என் மகளாய் கணமேனும் இருப்பாயோ?  


ஒன்று இரண்டெனவே ஒவ்வொன்றாய் ஈன்றாலும்

தலைமகனாம் என்னைத்தான் தவிக்கவே விடுவாயோ?


நித்திரையிலுனைப் பார்த்து நித்தமும் தலையணையை 

தழுவியவென் தவிப்பை தங்கமே அறிவாயோ?


மோகத்தில் எனையாழ்த்தி தாகத்தில் தவிக்க விட்டாய்

தேகத்தால் எனைசேர வேகத்தில் வருவாயே! 


No comments:

Post a Comment